வங்காள தேசத்தில் மெஹர்பூர் நகரில் அல்ஹரா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காயமடைந்த குரங்கு ஒன்று உதவி கேட்டு மருந்தகத்திற்குள் நுழைந்துள்ளது. குரங்கிற்கு எப்படி காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. கடையினுள் நுழைந்த குரங்குக்கு கடையில் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை அளித்தனர். கடையில் உள்ள ஊழியர்களும் அருகில் இருந்தவர்களும் குரங்கிற்கு ஒரு கரைசல் போன்ற கழிம்பை தடவுகின்றனர்.
மற்றொருவர் குரங்கின் கையை பிடித்துக் கொண்டு உதவுகிறார். இதன்பின் குரங்கின் மூட்டில் காயமடைந்த இடத்தில் கழிம்புகளை போட்டு கட்டுப்போன்று சுற்றி மருத்துவ உதவி செய்தனர். இந்த செயல்முறை முழுவதும் குரங்கு அசையாமல் ஒத்துழைத்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில், காயமடைந்து வலியுடன் மருந்தகத்திற்குள் நுழைந்த குரங்கிற்கு அங்கிருந்த ஊழியர்கள் முதலுதவி செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குரங்கின் புத்திசாலித்தனத்தையும், அதன் காயத்திற்கு சிகிச்சை அளித்த கடை ஊழியர்களையும் சமூக வலைதள ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram