அடடே சூப்பர் வசதி…! வாட்ஸ் அப்பில் வந்தது புதிய அப்டேட்… பயனர்களுக்கு குட் நியூஸ்..!!
SeithiSolai Tamil March 16, 2025 10:48 PM

வாட்ஸ் அப்- ஐ உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களுடைய வசதிக்காக whatsapp நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக தொடங்கிய whatsapp பல்வேறு வகையான டிஜிட்டல் சேவைகளையும் வழங்கி வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் இந்த நிறுவனத்தின் செயலியின் மூலமாக பணம் அனுப்பும் சேவை இந்தியாவில் தொடங்கியது. இதனால் நாம் Chat செய்யும் போது பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். இந்நிலையில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது.

அதாவது Whatsapp ப்ரொபைலியேயே பயனர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் லிங்க இணைத்துக் கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதற்கு settings இல் சென்று ப்ரொபைலில் சென்று லிங்க் ஆப்ஷன் கிளிக் செய்து இணைத்துக்கொள்ளலாம். இதில் யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பதையும் எடிட் செய்து கொள்ள முடியும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.