டெல்லியில் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட ஒரு மகனுக்கு தன் தாய் தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக வழங்கி உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது ராஜேஷ் என்ற 59 வயது தொழிலதிபர் டெல்லியில் வசித்து வருகிறார். இவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக அவருடைய 80 வயது தாய் தன் மகனுக்கு தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து டாக்டர்கள் சிறுநீரகம் பொருந்துமா என்று பரிசோதனை செய்ததில் பொருந்தும் என்பது தெரிய வந்த நிலையில் ஆப்ரேஷன் நடைபெற்றது. மேலும் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது தாயும் மகனும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.