APPLY NOW: NCET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க..!!
SeithiSolai Tamil March 16, 2025 10:48 PM

தேசிய பொது நுழைவுத் தேர்வு (NCET) க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்தத் தேர்வு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான நுழைவு தேர்வாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலமாக வழங்கப்படும் நான்கு வருட ஆசிரியர் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படும் இந்த தேசிய பொது நுழைவு தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நான்கு வருட கால ஆசிரியர் படிப்பில் சேர்வதற்கு இந்த நுழைவுத் தேர்வானது நடத்தப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க முதலில் க்குச் செல்லவும் . உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்கவும். பின்பு தனிப்பட்ட, கல்வி மற்றும் தொடர்பு விவரங்களை உள்ளிடவும். உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும். விண்ணப்ப கட்டணமாக பொது/ஓபிசி வேட்பாளர்கள்: ₹1,000 SC/ST வேட்பாளர்கள்: ₹500 கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். பின்னர் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, சமர்ப்பிக்கவேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.