கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திடீர் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன. . நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர்.
இந்தியா முழுவதும், ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதே நாளில் இஸ்லாம் மதத்தினரின் வெள்ளிக்கிழமை தொழுகையும் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தின் சமூகரீதியாக மிகவும் பதற்றம் நிறைந்த பெட்மா நகரில் இன்ஸ்பெக்டர் சஞ்சய் பதக் பணியில் ஈடுபட்டிருந்தார். தனது சக ஊழியர்களிடம் கடுமையான மார்பு வலி இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை இந்தூரில் உள்ள பம்பாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.