“பொதுமக்களை மிரட்டிய 9 பேரை கைது செய்து தெருவில் இழுத்து சென்ற போலீஸ்”… 24 மணி நேரத்தில் வீடுகளை இடிக்கவும் உத்தரவு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
SeithiSolai Tamil March 16, 2025 11:48 PM

குஜராத் மாநிலத்தில் உள்ள ஷஷ்வத் சொசைட்டி அருகே உள்ள வஸ்த்ரால் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு கத்தி மற்றும் பெரிய கம்புகளை வைத்து தெருவில் நடமாடிக் கொண்டிருந்த பொது மக்களை பயமுறுத்தி துன்புறுத்திய 9 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சட்டவிரோதமான கும்பலை மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகலில் காவல்துறையினர் பொது இடங்களில் அணிவகுத்து நிற்க வைத்து இழுத்துச் சென்றனர். இதனை அடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட கும்பலில் உள்ள சிலரின் சட்ட விரோதமான வீடுகளை இடிக்க அரசாங்கம் உத்தரவிட்டது.

அதன்படி அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த கும்பலில் முக்கிய நபரான ஒருவர் ராஜ்பீர் சிங். இவரது சட்ட விரோதமான வீடு அகற்றப்பட்டது. இதனை அடுத்து கோக்ராவில் உள்ள பகவான் தாஸ் சாவ்லில் பகுதியில் உள்ள மற்றொரு அதே கும்பலை சேர்ந்த நபரான ஷியாம் கம்லேவின் வீடும், அதனை அடுத்து அல்கேஸ் யாதவ் என்ற மற்றொரு குற்றவாளியின் வீடுகளும் இடிக்கப்பட்டன. மேலும் இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அவர்களது இடித்த வீட்டிற்கு அருகில் கொண்டுவரப்பட்டு பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னிலையில் புஸ்-அ ப் செய்ய சொல்லி வற்புறுத்தி, தடிகளால் காவல்துறையினர் அடித்தனர்.

இதுகுறித்து அகமதாபாத் காவல் ஆணையர் தெரிவித்ததாவது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொது மக்களை பயமுறுத்தியதாகவும், பொது இடங்களில் ஆயுதங்களை ஏந்தி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் ஒரு சிறுவர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7 பேர் சட்ட விரோதமான கட்டுமானங்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவை தற்போது இடிக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பொதுமக்கள் கூறியபடி, இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறில் வன்முறை ஏற்பட்டதாகவும், இதில் குற்றவாளிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வது மட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள வாகனங்களை சேதப்படுத்தி, பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். பொதுமக்களையும் தாக்கி பயமுறுத்தி துன்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அவர்களை பொது இடங்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்த்துவதற்கு அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.