பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு மொழி அரசியல் செய்து வருகிறது. மும்மொழி கல்வி விவகாரத்தில் மக்கள் ஆதரவு இல்லை என்பது தெரிந்ததால் தற்போது தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட தமிழ்நாட்டில் குறையாது என்று உறுதி கொடுத்துள்ளார்.
நாங்கள் மும்மொழிகல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை 14 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். வருகிற மே மாதத்திற்குள் கண்டிப்பாக ஒரு கோடி பேர் கையெழுத்து போடுவார்கள். திருச்சியில் போலீஸ் அராஜகம் அதிகமாக இருக்கிறது. மேலும் தமிழகத்தின் தலைமை டாஸ்மாக் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறினார்.