#Breaking: நெஞ்சில் முட்டிதூக்கிய காளை; இளைஞர் பரிதாப பலி.. முதல்வர் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.!
Tamilspark Tamil March 17, 2025 12:48 AM
முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், இளைஞர் மாடு முட்டித்தூக்கி பலியானார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில், இன்று முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதையும் படிங்க:

தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 1000 காளைகள், 630 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நெஞ்சில் முட்டியது

இந்நிலையில், போட்டியில் மாடுபிடி வீரராக சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் மகேஷ் பாண்டியன் களமிறங்கி இருந்தார். இவர் மாடு பிடிக்க முற்பட்டபோது, ஆக்ரோஷத்துடன் வந்த மாடு, அவரின் நெஞ்சில் முட்டி தூக்கியது.

மரணம் உறுதி

இதனால் மகேஷின் நெஞ்சில் காலை கொம்புகள் கிழித்து படுகாயம் ஏற்படவே, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், முத்துபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.