கார் ஓட்டும்போதே மாரடைப்பில் பிரிந்த உயிர்; தறிகெட்டு பாய்ந்த வாகனம்.. பதறவைக்கும் திக்திக் காட்சிகள்.!
Tamilspark Tamil March 17, 2025 12:48 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொல்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தீரஜ் பாட்டில் (வயது 55). இவருக்கு சொந்தமாக கார் உள்ளது, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது காரில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.

திடீர் மாரடைப்பு

அச்சமயம், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, ஆக்ஸலரேட்டரை மிதித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் தீரஜின் சுயநினைவின்மையால் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு பாய்ந்த கார், சாலையோரம் இருந்த பல வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதையும் படிங்க:

10 வாகனங்கள் சேதம்

இந்த விபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தீரஜ் நிகழ்விடத்தியிலேயே உயிரிழந்தார். கார், இருசக்கர வாகனம், ஆட்டோ என 10 வாகனங்கள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீரஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கிய தீரஜ் கார் ஏற்படுத்திய விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ பதிவுகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.