சென்னை ராயபுரம் மேற்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குறித்த தன் சர்ச்சை பேச்சுக்கு திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வருத்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது எக்ஸ் தளத்தில், “என் அன்பு இஸ்லாமிய உறவுகளே...நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர். நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்... எனக் குறிப்பிட்டு விஜய்யின் பேச்சை தோலுரித்து நான் பேசியதை இட்டுக்கட்டி பரப்புகின்றனர். இஸ்லாமியர்கள் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.