தமிழக அரசு நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட்டை தனித்தனியாக சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது பட்ஜெட் தொடர்பாகவும் பட்ஜெட்டின் போது ரூ.என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் அது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக தான் ரூ. என்ற வார்த்தையை பயன்படுத்தினோம். ஆனால் தமிழ் மொழியை பிடிக்காதவர்கள் அதனை பெரிய செய்தியாக மாற்றி விட்டனர்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வந்தால் அதனை பரிசீலனை செய்யலாம். ஆனால் நெகட்டிவ் செல்ல வேண்டும் என்பதற்காகவே சிலர் விமர்சிப்பது அரசின் மீதுள்ள வன்மத்தை மட்டுமே காட்டுகிறது. அதில் உருப்படியாக எதுவுமே இல்லை என பட்ஜெட் மீதான விமர்சனங்கள் பற்றி பேசியுள்ளார். அதன் பிறகு ஒன்றிய அரசுக்கு பேரிடர் நிதி கொடுங்க கல்விக்கான நிதியை விடுவிங்க என்று தமிழ்நாடு சார்பாக 100 கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கெல்லாம் பதில் அளிக்காத ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வந்த ரூ எழுத்தை பற்றி பேசியுள்ளார். அந்த பட்ஜெட் லோகோவில் வந்த அந்த ரூ எழுத்தை அவர்களும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார்கள். மொத்தத்தில் இந்திய அளவில் நம்ம பட்ஜெட்டும் ஹிட் தமிழும் ஹிட். மேலும் பட்ஜெட்டை தமிழக மக்கள் வரவேற்கிறார்கள் என்று கூறினார்.