தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளை மாடுகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.இந்நிலையில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற 22 வயது வாலிபர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டார். அப்போது அவரை காளை மாடு முட்டியதால் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். எம் காம் பட்டதாரியான இவர் சீனாவில் வேலை பார்த்து வந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். மேலும் விடுமுறையில் ஊருக்கு வந்த வாலிபர் மாடு முட்டி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.