அனைத்து அறிவிப்புகளையும் விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் உத்தரவு.!
Seithipunal Tamil March 17, 2025 06:48 AM

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நீர்வளத்துறையின் பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல வாரியாக ஆய்வு, நீர்வளத்துறையின் முன்னோடியான திட்டங்கள் குறித்த முன்னேற்றம், நடைபெற்று வரும் முக்கிய திட்டப் பணிகள் குறித்த முன்னேற்றம், அணை புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் துறையில், அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், சிறப்பு தூர் வாரும் பணிகளை பாசன நீர் திறப்பிற்கு ஏதுவாக விரைந்து முடிக்குமாறும், இந்த நிதியாண்டின் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் சயமன்மதன், நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளர் சுஸ்ரீதரன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள். கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.