சென்னை ராமாபுரம் பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராமாபுரம் அரசமரம் ஜங்ஷனில் அமைந்துள்ள ஒரு பிளாஸ்டிக் குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக பர்னிச்சர் குடோனில் தீ ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தீயானது அருகில் இருந்த பிளாஸ்டிக் குடோன் மற்றும் மெக்கானிக் கடை என அடுத்தடுத்து மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மளமளவென பரவத்தொடங்கியுளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அறிந்து இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம் உள்பட 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த பயங்கர தீயால் அதிக அளவிலான கரும்புகை அப்பகுதியில் சூழ்ந்தது. இதனால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.