வேலூர்: 13 வயதுடைய சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலி.. கணையம், சிறுநீரகம், நுரையீரல் செயலிழந்து சோகம்.!
Tamilspark Tamil March 17, 2025 07:48 AM
ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம், முடினாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோவிந்தராஜுக்கு ஷிவானி (13), நிரஞ்சனா (11) என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

சிறுமிகள் இருவரும் அரசுப்பள்ளியில் 9 மற்றும் 6ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதனிடையே, சிறுமி ஷிவானி காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் மார்ச் 7 அன்று வேலூரில் ல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:

அங்கு ஷிவானிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, ஒரு வார காலமாக தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழந்தார். அவரின் சிறுநீரகம், கணையம், நுரையீரல் உட்பட உள்ளுறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.