பீகார் மாநிலத்தில் வசித்து வரும் 6 பேர் கொண்ட தொழிலாளர்கள் குழு, தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனேகல் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில், வேலை பார்த்து வந்தனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு 6 நபர்களும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்திவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென இவர்களுக்குள் வாக்குவாதம் உண்டாகி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
இந்த மோதலில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட நிலையில், அங்கிருந்த கட்டை, இரும்பு கம்பி கொண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் 22 வயதுடைய அன்சு, ராதேஷி, ஷியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமறைவான 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: