ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் வசித்து வருபவர் சந்திரகிஷோர். இவரின் மனைவி ராணி. தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல், மந்த நிலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
கிஷோர் மகன்களிடம் எப்போதும் வாழ்க்கை குறித்த பயத்தை வெளிப்படுத்தி படிக்க வற்புறுத்தி இருக்கிறார். எந்த பலனும் இல்லை. இதனால் போட்டிகள் நிறைந்த உலகில் மகன்கள் எப்படி பிழைப்பார்கள்? என சந்திர கிஷோருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நபர், மகன்களை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்தார். பின் கிஷோரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க:
இந்த விசயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: