ஆவாரம்பூ பொடியில் இவ்வுளவு நன்மைகளா? அசத்தல் டிப்ஸ் இங்கே.!
Tamilspark Tamil March 17, 2025 08:48 AM

சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைய, முகம் பொழிவுபெற செயற்கையான பொருட்களை வாங்கி உபயோகம் செய்வதை தவிர்த்துவிட்டு, இன்று இயற்கையாக முகப்பொழிவை அதிகரிக்கும் முறை குறித்து காணலாம்.

சருமம் பொன்னிறமாக

கடலை மாவு, பாசிப்பருப்பு, ரோஜா, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றுடன் ஆவரம்பூவினை சம அளவில் எடுத்துக்கொண்டு வசம்பு சேர்த்து அரைக்க வேண்டும். உடலுக்கு சோப் தேய்த்து குளிப்பதற்கு பதில் மேற்கூரிய கலவையை தயார் செய்து தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொன்னிறத்துடன் அழகாகும்.

இதையும் படிங்க:

மேனி பொன்னிறப்படும்

சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் விரைந்து மறையும். சரும தேமல் போன்றவை சரியாகும். சரும சுருக்கங்கள் விரைவில் சரியாகும். மேனி பொன்னிறப்படும். ஆவாரம்பூவை தேநீர் போல குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

ஆவாரம் பூவோடு ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளிக்க நமைச்சல் துர்நாற்றமானது நீங்கும். ஆவார பூவை அரைத்து சாறாக்கி சுண்டக்காய்ச்சி தேங்காய் எண்ணெயோடு சேர்த்து தலையில் தேய்த்து வர வழுக்கை வராது. முடி உதிரும் பிரச்சனை நின்று, முடி வளரும்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.