சட்டசபையில் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடக்கம்!
Dinamaalai March 17, 2025 11:48 AM

இன்று மார்ச் 17ம் தேதி, தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது.

2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14ம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கை 15ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடா்ந்து நேற்று மார்ச் 16ம் தேதி விடுமுறை தினம் என்பதால் பேரவை இன்று மார்ச் 17ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும், நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்குகின்றன.

இதில் திமுக, அதிமுக உள்பட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா். இந்த விவாதங்களுக்கான பதிலுரை வரும் மாா்ச் 21ம் தேதி அளிக்கப்படவுள்ளது.

அரசின் நிதிநிலை அறிக்கையை புறக்கணித்த அதிமுக, பாஜக அந்த அறிக்கைகள் மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்தன. இதனால், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது அந்தக் கட்சிகள் சாா்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், கூட்டத் தொடா் சூடு பிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.