மனோஜை கத்தியால் குத்த சென்ற முத்து.. நிலைமையை தலைகீழாக மாற்றிய ஸ்ருதி..!
Tamil Minutes March 17, 2025 11:48 AM

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோட்டில் முத்துவின் நண்பர் செல்வம் மற்றும் அவரது மனைவி முத்துவை பார்க்க வீட்டிற்கு வருகின்றனர்.

அதன்பின், இருவரையும் சாப்பிட முத்து மற்றும் மீனா அழைக்கின்றனர். இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென மனோஜ், “நான் உடனே மீட்டிங் செல்ல வேண்டும், என்னால் வெயிட் பண்ண முடியாது, உடனே சாப்பிட வேண்டும்” என்று சொல்ல, அதைக் கேட்டு செல்வமும் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைகின்றனர். அவர்கள் உடனே எழுந்து வெளியே செல்கின்றனர்.

அப்போது, முத்து, “சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை வெளியே போக வைத்தாயா?” என்று மனோஜிடம் சண்டை போடுகிறார். மனோஜும் ஏடாகூடமாக பதிலுக்கு பேச, இருவருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்படுகிறது.

சண்டையின் போது, முத்து, “நீ என்ன சாப்பிட தானே வேண்டும்” என்று மனோஜை உட்கார வைத்து, தோசையை வாயில் திணிக்கிறார். இதை பார்த்து மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர். அதே நேரத்தில், மனோஜ், “என்னை கொலை செய்ய நினைக்கிறாயா? நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே! இதெல்லாம் நீ செய்வாய்” என்று கோபமாக பேசுகிறார்.

இதனால், முத்து ஆத்திரமாகி கத்தியை எடுத்து குத்தப் போகிறார். அப்போது, ஸ்ருதியின் அம்மா அங்கு வந்து, “இது வீடா? இல்ல, கொலைகார இடமா? என் மகளை இங்கு வாழ வைக்கவே பயமாக இருக்கிறது” என்று கூறுகிறார். அவரை ஸ்ருதி சமாதானப்படுத்தி அனுப்பிவைக்கிறார்.

அதன் பின், ரவி, “உங்கள் இருவரும் ஏதாவது தவறு செய்திருக்கிறீர்கள், எனவே சாரி சொல்லுங்கள்” என்று கூற, இருவரும் மன்னிப்பு கேட்டு அவரவர் இடத்திற்கு செல்கின்றனர்.

இதற்குப் பிறகு, ஸ்ருதி, “நிலைமையை சரி செய்ய ஒரு கேம் விளையாடலாம், வாங்க” என்று அனைவரையும் அழைக்கிறார். முத்து, மீனா, ரோகிணி, மனோஜ், ரவி, ஸ்ருதி ஆகிய ஆறு பேரும் அந்த கேம் விளையாட, அனைவரும் நடந்ததை மறந்து சிரிக்கின்றனர். ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், டிரைவிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருவர் வருகிறார். அவர் யார் என்று பார்க்க முத்து வெளியே செல்லும்போது, அங்கே சிந்தாமணி இருக்கிறார்.

சிந்தாமணி மற்றும் முத்து, மீனா இடையே உரையாடல் நடப்பதுடன், இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது. நாளைய எபிசோட்டில், பிரவுன் மணி அண்ணாமலை குடும்பத்திடம் மாட்டும் காட்சிகள் உள்ளன. எனவே, நாளைய எபிசோடு சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.