நம்மில் நிறைய பேருக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரியும்.ஆனால் நின்று கொண்டே தண்ணீர் குடிப்போம். அதுவும் அண்ணாந்து தான் தண்ணீர் குடிப்போம். இநத இரண்டுமே தவறு தான்.
இதை நிறைய பேர் கவனித்து இருக்க மாட்டீர்கள். நன்கு கூர்ந்து கவனித்துப் பார்த்தால் இது தெரியும்.
நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நம்முடைய உடலில் உள்ள திசுக்களின் அமைதியைக் குழைக்கும்.
தண்ணீர் நேரடியாக வேகமாக உடலுக்குள் இறங்கும் போது ஏற்கனவே இருக்கும் திரவ நிலைகளின் சமநிலையை மாற்றிவிடும்.
நம்முடைய செரிமானப் பாதையை சுத்தம் செய்து, ஜீரணத்தை மேம்படுத்துவதற்கு தண்ணீர் மிக அவசியம்.
ஆனால் அதே தண்ணீரால் ஜீரணம் பாதிக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது செரிமானத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பவர்களுக்கு எலும்புகளில் வலி மற்றும் வீக்கம் உண்டாகும்.
குறிப்பாக உடலில் உள்ள நீர்மங்களின் பிஎச் அளவில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக உடலில் உள்ள எலும்பு மூட்டுகளில் திரவம் தேங்கி வலியை ஏற்படுத்தும்.
நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது தண்ணீர் வேகமாக வயிற்றுப் பகுதஜயை நோக்கி ஓடிவிடும்.
அப்படி வேகமாகச் செல்லும்போது உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லாமல் நேரடியாக சிறுநீரகத்தை அடைந்து விடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல், வாய வைத்து மெதுவாக உறிஞ்சி தான் குடிக்க வேண்டும்.
தண்ணீரை எப்போதும் கடகடவென்று குடிக்க கூடாது. மெதுவாக தான் குடிக்க வேண்டும்.
எப்போது தண்ணீர் குடித்தாலும், எவ்வளவு அவசரமாக இருந்தாலும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. உட்கார்ந்தபடி தான் குடிக்க வேண்டும். ஒரு நிமிடம் உட்கார்ந்து குடிப்பதில் எந்த வேலையும் கெட்டுப் போகாது. நீங்கள் குடிக்கும் தண்ணீரின் பலன் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் உட்கார்ந்து தான் குடிக்க வேண்டும்.