வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் 50 பேரின் உயிரை காவு வாங்கிய துக்க நிகழ்வாக மாறி உள்ளது . தலைநகர் ஸ்கோப்ஜியோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் கோகானி என்ற இடத்தில் கிளப் ஒன்று உள்ளது.
இந்த கிளப்பில் இசை குழு சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது அப்போது ஏராளமானவர்கள் வந்து இசையை கண்டு ரசித்தனர் அந்த சமயத்தில் சில இளைஞர்கள் வானவேடிக்கையை சாதனைகளை பயன்படுத்தினர் அப்போது மேற்கூரை தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
அந்த தீ மெல்ல மெல்ல பரவி அருகில் இருந்த கூரை முழுவதும் பற்றிய தொடங்கியது . சிறிது நேரத்தில் வானுயர கரும்புகை பரவ தீ கொழுந்து விட்டு இருந்தது. எப்போது அங்கிருந்தவர்கள் உயிர் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர் எனினும் தீயில் எரிந்து 50 பேர் கருகி போனார்கள்.
இசைச் கச்சேரியில் பங்கேற்றவர்கள் அங்கும், இங்குமாக ஓடினா். அப்போது கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு வாகனங்களுக்கும் தகவல் கொடுத்தனா். அந்த தகவலின்போில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனங்கள், பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனா். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனா். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். இதில் பலரது உடல் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிர் பலி எண்ணிக்கை அதிகாிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனா். இந்த துயர சம்பவம் குறித்து போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே தீ விபத்து குறித்து பேட்டியளித்த மரிஜா டசேவா என்ற 20 வயதான இளம்பெண், விபத்து ஏற்பட்டவுடன் அனைவரும் வெளியே செல்ல முயன்றதால், நெரிசலில் சிக்கிக் கொண்டதாகவும் பின்னர் எப்படியோ வெளியேறியதாகவும் தெரிவித்தார்.