மத்தியபிரதேச மாநிலம் மவ்கஞ்ச் மாவட்டம் குட்ரா கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அசோக் குமார் சாலைவிபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டதாகவும், அந்த கொலையில் அதேபகுதியை சேர்ந்த சன்னி விவாடி என்ற நபருக்கு தொடர்பு இருப்பதாகவும் பழங்குடியினர் சந்தேகித்து உள்ளனர்.
இன்று விவாடியை பழங்குடியினத்தை சேர்ந்த கும்பல் ஒன்று கடத்தி, குட்ரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் விவாடியை அடைத்துவைத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த கடத்தல் குறித்து ஷாபூர் பகுதி காவல் துறைக்கு தெரியவர, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திர கவுதம், சப் - இன்ஸ்பெக்டர் பாரதியா சந்தீப் தலைமையிலான போலீசார் குட்ரா கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
ஆனால், போலீசார் வருவதற்குள் விவாடியை கடத்திய கும்பல் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட விவாடியாவின் உடல் அங்குள்ள வீட்டில் இருந்த நிலையில், கதவை திறக்க போலீசார் முயன்றனர். அப்போது, போலீசாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.
அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் உள்பட போலீசார் மீது தாக்குதல் நடத்தியதில், படுகாயமடைந்த சந்தீப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் ட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சந்தீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், சில போலீசாருக்கும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழங்குடியின கும்பல் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப், குட்ரா கிராமத்தை சேர்ந்த சன்னி விவாடி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் தலைமறைவான நிலையில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.