தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் 100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசியது.
இதனால் பொதுமக்கள் வீட்டிலே முடங்கினர். இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை, தனது உடலின் மீது தண்ணீரை பீச்சி அடித்துக்கொள்கின்றது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.