“ஈகோ இல்லாத ஒரே கட்சி அதிமுக... கொடி பிடிக்கும் தொண்டன் கூட பதவிக்கு வரலாம்”- ஜெயக்குமார்
Top Tamil News March 17, 2025 04:48 PM

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் உள்ள சுகுமாரி தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாநகர அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு மணமக்களை வாழ்த்த வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “அதிமுக கட்சியில் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஈகோ இல்லாத ஒரே கட்சி, திமுக போன்று குடும்ப ஆதிக்கம் கட்சி என்பதெல்லாம் இல்லை, அதிமுக அண்ணா தொடர்ந்து எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வளர்ந்த பிள்ளைகள் அதிமுகவில் ஈகோ என்பதே கிடையாது. ஈகோ இல்லாமல் கொடி பிடிக்கும் தொண்டன் கூட பதவிக்கு வரலாம் என்ற ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். 


டெல்லி மற்றும் சத்தீஸ்கர் மாநிலம் போன்று மதுபான முறை கேட்டில் ஆட்சி இழந்தது போல மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் மதுபான முறைகேட்டில்  2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை இழக்கும். செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கான பதில் அளித்துவிட்டார். அவரைப் பற்றி துருவி துருவி கேள்வி கேட்டாலும்  அவர், அதிமுக சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆகியால் கருத்து சொல்ல முடியாது. திமுகவின் கடைசி  பட்ஜெட் இது, பட்ஜெட்டில் ஒன்னும் இல்லை, ஆனால் யாரும் அதை பற்றி யாரும் பேசப்படுவதில்லை. அதிமுக பற்றி என்னதான் கேள்வி கேட்டாலும் அதிமுக உடைக்க முடியாத மாபெரும் இயக்கம், எஃகு போன்றது, என்ன சதி, சூழ்ச்சி செய்தாலும் தொண்டர்களே அதனை முறியடித்து விடுவார்கள்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.