பெரும் அதிர்ச்சி... வழக்கறிஞர் 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்!
Dinamaalai March 17, 2025 10:48 PM

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் வசித்து வருபவர் இளம்பெண்.   இவருக்கு திருமணம் முடிந்து, தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இளம்பெண்ணுக்கு 14 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருக்கின்றனர்.   சிறுமிகள் இருவரும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படித்து  வருகின்றனர்.


ரப்பர் தோட்டத்தில் இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் இரவு வேலைக்குச் சென்ற பின்னர், சிறுமிகள் இருவரும் தக்கலை பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர். நள்ளிரவு சுமார் 12 மணிக்கு  தெருவில் சுற்றிய சகோதரிகளை, அவ்வழியே சென்ற வழக்கறிஞர் பேசி தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 12 வயது சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்தவர், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவருகிறது. 


சிறுமியை வன்கொடுமை செய்தவர், சகோதரிகளை தக்கலை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச்சென்று, மதுரை செல்லும் பேருந்தில்  மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். மகள்கள் காணாதது தொடர்பாக தாய் மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து, வழக்கறிஞர் அகிலேஷை கைது செய்தனர்.  சிறுமிகள் தங்களின் கையில் ஸ்மார்ட்போன் வைத்திருந்த நிலையில், அதனை மதுரையில் வைத்து சார்ஜ் ஏற்றி ஆன் செய்தபோது அவர்களின் இருப்பிடம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமிகளை மீட்ட காவல்துறையினர், வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 6 பிரிவுகளின் கீழ் வழக்கறிஞருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.