சினிமாவில் குடித்து, புகைபிடித்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு என்ன உரிமை உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெற இருந்த போராட்டத்தை தவெக கடுமையாக விமர்சித்து இருந்தது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க. - தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது. இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது என கூறினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், Work From Home அரசியல் செய்யும் விஜய்க்கு மக்கள் பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும். சினிமாவில் குடித்து, புகைபிடித்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு என்ன உரிமை உள்ளது. எனக்கும் பேசத் தெரியும். தமிழக வெற்றி கழகம் எல்லை மீறக்கூடாது. திமுகவின் B டீம் விஜய் என கூறினார்.