முடி நரைக்காமல் இருக்க அற்புதமான இயற்கை வைத்தியம்
Top Tamil News March 19, 2025 10:48 AM

பொதுவாக முடி நரைக்க காரணம்  மனக்கவலை ,சத்துக்குறைவு ,மலசிக்கல் போன்றவற்றை காரணமாக கூறலாம் .இந்த  நரைக்கு நிறைய இயற்கை வைத்தியம் உள்ளது .அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1.நெல்லிக்காயை  தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி முடியை கருமையாக்கும்
2.மருதாணி இலையை எண்ணெயில் காய்ச்சி தலையில் தடவி வந்தால் இளநரை நீங்கும்


3.கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வந்தால் இளநரை நீங்கும்
4.பாதாம் எண்ணெயை கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு தலைக்கு தேய்த்து வந்தால் இள நரை நீங்கும்
5.கரிசலை என்னும் கரிசலாங்கண்ணி சாறு அரை லிட்டர், நீலி என்ற அவுரி சாறு அரை லிட்டர். நல்லெண்ணெய் ஒரு லிட்டர் இம்மூன்றையும் கலக்கி ஒரு இரும்பு வாணலியில் இட்டு கொல்லன் உலையில் கிடைக்கும் இரும்பு கிட்டம் 100 கிராம் பொடி செய்து போட்டு அடுப்பில் காய்ச்சவும். சிடுசிடுப்பு அடங்கியவுடன் எண்ணையை இறக்கி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து உபயோகித்தால் இள நரை இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிடும்  
6.நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்து செம்பருத்திப்பூ 50 அரைத்து எண்ணெயில் கலக்கி காய்ச்சவும் மேற்சொன்ன பக்குவத்தில் காய்ச்சி இறக்கி பிரதி தினமும் தடவி வந்தால் இளநரை ஓடி முடி கருமையாக மாறும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.