மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் அருகே விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்ட்டினஸ் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம் ரோட்டின் தீவிலிருந்து லா சிபாவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ஆற்றில் விழுந்ததால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. விமானத்தில் பயணம் செய்த 17 பேரில் 5 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கரிபுனா இசைக்குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவர் ஆரேலியாவும் ஒருவர். அந்த நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருந்தவர். அவரது மறைவிற்கு ஹொண்டுரான் ஜனாதிபதி சியோமாரா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.