FLASH: தெரு நாய்கள் கடித்து மரணித்த கால்நடைகளுக்கு இழப்பீடு…. அரசின் அதிரடி உத்தரவு….!!
SeithiSolai Tamil March 19, 2025 09:48 PM

தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்தி கடிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தெருநாய் கடியால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த நிலையில் தெரு நாய்கள் கடித்து மரணமடைந்த 1,149 கால்நடைகளுக்கு மொத்தம் 42 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெரு நாய் கடிக்கு உயிரிழக்கும் மாடுகளுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய், ஆடுகளுக்கு 4000 ரூபாய், கோழிக்கு ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.