நகைப்பிரியர்கள் அதிர்ச்சி... புதிய உச்சத்தில் தங்கம் விலை !
Dinamaalai March 20, 2025 02:48 PM

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆபரண தங்கத்தின் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. மார்ச் 14ம் தேதி வரை  தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து  இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 400 என்ற நிலையை அடைந்தது. 

அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8210-க்கும், ஒரு சவரன் ரூ.65680க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40ம், சவரனுக்கு ரூ.320ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இன்றைய விலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ 20  உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,310க்கும் சவரனுக்கு ரூ 160  உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.