5 ஆயிரம் ரூபாய் ரேட் பேசிய மனைவி.. போலீஸில் கணவன் புகார்!!
A1TamilNews March 20, 2025 02:48 PM

கணவன் - மனைவியாக குடும்பம்   நடத்த வேண்டும் என்றால் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்த மனைவி மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் கணவர்.

பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் சரக பகுதியில் வசித்து வருபவர் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஸ்ரீகாந்த். இவருக்கு பிந்துஸ்ரீ என்பவருடன்  2022-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பிந்துஸ்ரீ மிரட்டியதாக கணவன் கூறுகிறார். தற்போது ஸ்ரீகாந்துடன் வாழப் பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீசில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் தினமும் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று கூறி இருந்தார்.

குழந்தை பெறும் விவகாரம், தினமும் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகளையும் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது அதே வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் பிந்துஸ்ரீ கூறி இருந்தார். கணவன், மனைவி பிரச்சினையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்து இருப்பது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.