சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த கட்டுப்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது SMS அனுப்பப்பட்டு வருகிறது.