சென்னை மாவட்டத்தில் சுவாதி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தானேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனையடுத்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நேற்று சுவாதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவாதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுவாதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.