நாளை விடுமுறை கிடையாது... தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்!
Dinamaalai March 28, 2025 11:48 AM

நாளை கடைசி சனிக்கிழமை, தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் இயங்கும். நாளை விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் ரமலான், தெலுங்கு வருடப்பிறப்பு என்று அடுத்தடுத்து தொடர் விடுமுறை தினங்களாக வரவுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை மார்ச் 29ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும், அவை வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச் 29ம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை தினம். அதற்கு அடுத்த நாளான மார்ச் 30ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு மற்றும் மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை. இதனால் அன்றைய தினங்களிலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை தினங்கள்.

மாதத்தின் கடைசி 2 நாட்கள் தொடர்ந்து அடுத்தடுத்து பொது விடுமுறை தினங்கள் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி மார்ச் 29ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரேஷன் கடைகளில் பொருட்களை வழக்கம் போல் பொதுமக்கல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.