ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த நடிகர் விக்ரம்!
Newstm Tamil March 31, 2025 10:48 AM

திண்டுக்கல் அருகே நத்தமாடிபட்டி பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், திருச்சி, தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 700 காளைகளும், நத்தமாடிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்க முயன்றனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் கண்டு ரசித்தனர். வீர தீர சூரன் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.