வைரல் வீடியோ.. யூரோப்பை விட இந்தியாவின் மெட்ரோ சேவை சிறந்ததாக உள்ளது... ஜெர்மன் பயணி பெருமிதம்!
Dinamaalai April 02, 2025 01:48 AM

இந்தியாவிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் சுற்றுலாப் பயணிகள் மெட்ரோ சேவையின் தரத்தையும் வசதிகளையும் பார்த்த ஜெர்மனியைச் சேர்ந்த பயண வலைப்பதிவாளர் அலெக்ஸ் வெல்டர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். மேற்கத்திய யூரோப்பை விட இந்தியாவின் மெட்ரோ சேவை சிறந்ததாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். 

தனது பயண அனுபவம் குறித்த வீடியோவில், “POV: இந்தியாவின் மெட்ரோ மேற்கு யூரோப்பை விட சிறந்தது” என பதிவிட்டுள்ளார். இந்தியா வருமுன் பழைய பேருந்துகள், யில்கள் மற்றும் சத்தமான ஆட்டோக்கள் மற்றும் ரிக்க்ஷாக்கள் தான் இருக்கும் என நினைத்தாராம்.

ஆனால் அகரா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் நவீன மற்றும் தரமான மெட்ரோ வசதிகள் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். டெல்லி மெட்ரோவை குறிப்பாகப் புகழ்ந்தவர், அதன் மேடைக்கதவு வசதி, மொபைல் சார்ஜிங் போர்ட், பெண்கள் மற்றும் மூத்த நபர்களுக்கான தனி இருக்கை போன்ற அம்சங்களை புகழ்ந்து கூறியுள்ளார்.

இவை எல்லாம் முன்பு தெற்குக் கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவில் பார்த்திருந்தாலும், இந்தியாவில் இது போன்ற வசதிகள் இருக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். தெற்கு டெல்லியில் தங்கியபோது அதிகபட்ச நேரங்களில் சுமூகமாக இருக்கை கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் உணவு மற்றும் ஷாப்பிங் வசதிகள் நிறைய இருந்ததாகவும் கூறியுள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.