சவுதி அரேபியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான அல் உமா பகுதியில் நடந்த கோர விபத்தில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் கனவில் இருந்த கேரளாவை சேர்ந்த ஜோடி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வயநாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் லண்டனில் ஆண் நர்சாக பணிபுரிந்து வரும் நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கார்டியாடிக் சென்டரில் டீனா நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சவுதி அரேபியாவில் அல் உமா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த ஒரு கார் டீனா சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அலெக்ஸ், டீனா உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை வருகின்றனர்.