ஆஸ்திரேலியாவின் ஜுலியா க்ரீக் என்ற பகுதி நகர வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட கிராமமாக இன்றும் உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 500 பேர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மருத்துவர் ஓய்வுபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு ஒரு அதிரடி செய்தி வெளியிட்டது.
அதில், “நீங்கள் அதிக ஊதியம் தரும் வேலையைத் தேடுகிறீர்களா? சொந்த ஊரை விட்டு வெளியேறத் தயாரா? அப்படியென்றால் இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்.
ஆஸ்திரேலியாவின் ஜுலியா கிரீக் கிராமத்தில் பணியாற்ற விருப்பமுள்ள மருத்துவருக்கு இலவச வீட்டுவசதி மற்றும் காருடன், ஆண்டுக்கு 3.6 கோடி சம்பளம் வழங்கப்படும். ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது நகர்புறத்தில் உள்ள ஒரு ஆஸ்திரேலிய மருத்துவர் சம்பாதிப்பதை விட இரு மடங்கு அதிகம். ஆனால் அறிவிப்பு வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையிலும், தற்போது வரை அங்கு பணியாற்ற யாரும் முன்வரவில்லை.
இக்கிராமத்தில் இருந்து நகர்புறத்திற்கு செல்ல 7 மணி நேரம் ஆகிறது. அருகிலுள்ள மாநகரமான பிரிஸ்பேனுக்கு செல்ல 17 மணி நேரம் ஆகும். மேலும் இங்கு இணைய சேவை என்பது மிகக்குறைவாகவே உள்ளது. மின்சார வசதியும் பெரியளவில் இல்லை போன்ற காரணங்கள் தான் அங்கு யாரும் பணியாற்ற முன்வராததற்கு காரணமாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.