“16 வயது சிறுமியுடன் 2 வருட காதல்”… பலமுறை உல்லாசம் அனுபவித்து கருக்கலைப்பு செய்த போலீஸ்காரர்… மேஜரான பிறகு திருமணம் செய்ய மறுப்பு.. பரபரப்பு சம்பவம்.!!
SeithiSolai Tamil April 10, 2025 05:48 PM

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பலராமன் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் அவர் சிறுமியிடம் திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். உடனே பலராமன் சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததால் அவர் பலராமனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரம் பலராமனின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் அந்த பெண்ணிடம் பேசி பழகக் கூடாது என்று தங்கள் மகனை கண்டித்துள்ளனர்.

இதனால் பலராமன் அந்த பெண்ணை சந்திப்பதை நிறுத்திவிட்டதோடு செல்போனில் பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலராமனை நேரில் சந்தித்து கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதன் காரணமாக அவர் பலராமன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தற்போது தலைமுறைவாக உள்ள பலராமனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.