சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ நெட்டின்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது ஒரு தந்தை தன்னுடைய மகனை காரின் மீது அமர வைத்து விளையாடுகிறார். அந்த குழந்தைக்கு 8 மாதங்கள் இருக்கலாம். இப்போதுதான் அந்த குழந்தை தவழ்ந்து போகிறது. அந்த குழந்தையை வைத்து அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென குழந்தை காரின் மீது ஏறி சென்று விட்டது.
அந்த தந்தை காரை சுற்றி அங்குமிங்கமாக ஓடும் நிலையில் குழந்தையோ அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தவழ்ந்து செல்கிறது. அவரால் குழந்தையை பிடிக்க முடியாமல் பரிதவித்துப் போகிறார். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் குழந்தையை வைத்து எதில் விளையாட வேண்டுமோ அதில் தான் விளையாட வேண்டும் இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.