திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது பீரோ மேலே விழுந்து உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவி வேற்று ஜாதி இளைஞரை காதலித்ததாகவும், அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது இறப்பு குறித்து விஏஓ புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.