திடீரென ஒன்று கூடிய சினிமா பிரபலங்கள்..! தடபுடலாக விருந்து வைத்த ஜோதிகா!
Top Tamil News March 31, 2025 10:48 AM

நடிகை ஜோதிகாவை கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் சூர்யா.. இந்த ஜோடி பலருக்கு ரோல்மாடலாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.


சூர்யா - ஜோதிகா வீட்டு பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகர் சூர்யா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.


சூர்யா வீட்டு விருந்தில் கலந்துகொண்ட நடிகைகள் அனைவரும், அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி உணவும் அருமையாக இருந்ததாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய சூர்யா - ஜோதிகா இருவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கடைசியாக இருவரும் ஆறு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பின்னர் இருவரும் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா 45 திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.