ரசிகர்கள் ஷாக்..! புது சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி..!
Newstm Tamil March 31, 2025 10:48 AM

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல்கள் டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தினாலும் மறுபுறம், அண்மையில் தொடங்கப்பட்ட புது சீரியல் ஒன்றை முடிவுக்கு கொண்டுவர உள்ளது சன் டிவி. அது வேறெதுவுமில்லை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ரஞ்சனி என்கிற சீரியலை தான் விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளார்களாம். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டுவிட்டது. இதனால் ஓரிரு வாரங்களில் ரஞ்சனி சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

நட்பை மையமாக வைத்து ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகி வந்தது. சிம்பிளாக சொல்லப்போனால் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இந்த தொடர் உருவாகி வந்தது. மெல்ல மெல்ல பிக் அப் ஆகி வந்த இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், தற்போது ரஞ்சனி சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளனர்.

ரஞ்சனி சீரியல் தொடங்கப்பட்டு 4 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தொடரைக் காட்டிலும் பல மொக்கையான சீரியல்கள் எல்லாம் இருக்கையில் அதைவிட்டுவிட்டு இந்த சீரியலை ஏன் நிறுத்துகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.