சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது தினம் தினம் கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ. 67 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ40 ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8270க்கும், சவரனுக்கு ரூ320 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 66160 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தங்கத்தின் விலை ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை விலை உயரலாம் என நகை வியாபாரிகள் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் பொருட்டு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ112க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.112000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.