20 வயது இளம் தயாரிப்பாளரான ரியா ஷிபு; இணையத்தில் வைரலான இவர் யார்..?
Seithipunal Tamil March 22, 2025 10:48 AM

நடிகர் விக்ரமின் 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தை சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது. இதில் படக்குழு அனைவரும் கலந்துக் கொண்டு பேசினர். இதில் இளம் பெண் தயாரிப்பாளரான ரியா ஷிபு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இவர் மேடையில் பேசிய பேச்சு பார்வையாளர்களை கட்டிப்போட்டதோடு, அவருடைய பேச்சில் உள்ள தெளிவு,  எனெர்ஜியாக பேசிய விதம் அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸின் உரிமையாளர் . இவரது தந்தை ஷிபு மலையாள திரையுலகில் மிகப்பெரிய வினியோகிஸ்தர். தமீன் பில்ம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை தயாரித்தும் வினியோகிஸ்தும் உள்ளார். அத்துடன், பல வெற்றி திரைப்படங்களான புலி, இருமுகன், RRR, போன்ற திரைப்படங்களை தமிழில் தயாரித்துள்ளார். 

இந்நிலையில், எச்.ஆர் பிக்சர்ஸ் தக்ஸ், முரா மற்றும் தற்பொழுது வீர தீர சூரன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படமே இவர்கள் தயாரிக்கும் முதல் நேரடி தமிழ் படமாகும்.

இளம் தயாரிப்பாளரான அவதாரம் எடுத்துள்ள ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஃபேமஸ் மற்றும் வைரலானவர். இவர் செய்யும் ரீல்ஸ்-க்கும் மற்றும் பிரத்யேக எடிட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது இவர்தான் 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் என தெரிந்துள்ளதால் பலருக்கும் வியப்பு. இவர் மேடையில் பேசிய வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.