“நடிகர் சுஷாந்த் சிங் மரணம்”... இது கொலையா இல்ல தற்கொலையா…? நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பா…? 4 வருஷத்துக்கு பின் வெளிவந்த உண்மை..!!
SeithiSolai Tamil March 23, 2025 12:48 PM

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சுஷாந்த் சிங். இவர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிலையில் அந்த படமும் மாஸ் ஹிட் அடித்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இது ஒட்டுமொத்த திரை உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் மரணம் தற்கொலையா இல்லை கொலையா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதற்கிடையில் தங்களுடைய மகனை நடிகை ரியா சக்கரவர்த்தி தான் தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்த் சிங் தந்தை புகார் கொடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது தற்போது வழக்கின் விசாரணை அறிக்கையை மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் நடிகர் சுஷாந்த் தற்கொலையில் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தை கொலை என்று சந்தேகிக்க எந்த ஒரு அறிவியல் காரணங்களும் கிடைக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்ட அனைத்து கருத்துகளும் தவறானவை. மேலும் மன அழுத்தம் காரணமாகவே நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.