வைரலாகும் போஸ்டர்... தளபதி தலைமையில் தமிழகத்தை ஆளப்போறோம் ... பெரும் பரபரப்பு!
Dinamaalai March 24, 2025 09:48 PM

 
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி  நடைபெற உள்ளது. இந்நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி சென்னையில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில், பொதுக் குழுவில் கூட போறோம், தளபதி தலைமையில் 2026 ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்று கோவை முழுவதும் பொதுக் குழுவுக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

விஜய் தலைமையில் ஆளப்போறோம் என த.வெ.க.வால் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.  கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் சமீபத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.