இந்தியாவில் மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்கள் தொடங்கி கிராமப்புறங்கள் வரை மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அனைத்து மக்களுக்கும் சிலிண்டர் பயன்பாடு கிடைக்க வேண்டும் என்பதை தான் மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அதனால் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகின்றது. இதில் கேஸ் அடுப்பும் முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு பயனாளிகளின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி பாஸ்புக் நகல், வயது சான்றிதழ் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு http://www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உஜ்வாலா யோஜனா 2.0 என்பதை கிளிக் செய்து செல்போன் எண் மற்றும் தேவையான தகவல்களை கொடுத்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.