மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரகண்ட்டிலும், கோல்கட்டாவிலும் வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள், அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தை +66 618819218 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள சூழ்நிலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், மியான்மர் நிலநடுக்கம் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக உதவி எண்கள் அறிவிப்பு
மியான்மர் நிலநடுக்கம் - உதவி எண்கள் அறிவிப்பு
உதவி எண்கள் : 1800 309 3793,
+91 80690 09901,+91 80690 09900
மின்னஞ்சல்:nrtchennai@gmail.com
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக உதவி எண்கள் அறிவிப்பு